Sunday, November 9, 2014

Software Kalyaana வைபோகமே!!!

வலை வீசி இதயம் கவரும் தினங்கள் இனி இல்லை
வலையில் அல்லவா இதயங்கள் upload செய்ய படுகின்றன

வாய் பேசி தொலை பேசி மணி ஓசை வர காத்திருந்து
அடுத்த வீடு வாயாடி ஆன்டிஇடம் இருந்து மறைத்து
தலையனையில்  காதல் மடல்கள் மறைத்து
கண்ணீர் கையொப்பம் இட்ட பேப்பர் மடல்கள் இனி இல்லை

USA மாப்பிள்ளை -  அவன் உறங்கும் நேரம்
அவள் கணவில் எதோ புகைப்படம் காட்டிய முகம்
வந்து போக , real time wordl il offline email பறிமாரும்
உணர்ச்சி அற்ற "SMALL NOTHING"


முந்தைய Generation, பெண் பார்த்து
ஆண் பார்த்து
உறவினர் பார்த்து
இனிதே கை பிடித்து இணைதனர்...

இன்றைய Generetion
Skype சொல்லும் ஒரு குரல்
Facebook காட்டும் சிறு முகம்
GMAIL அறிவிக்கும் e - மடல்
இவை அனைத்தும் தெரிவித்த ஒரு நிழல்
அதன் புனை பெயர் காதல்
என்று Internet இல் இதயம் பரிமாறி

இனிதே இணைந்த பின் தெரியும்...
Computer மாப்பிள்ளை busy ஆஹ இருந்த தருணங்களில்
அவள் e - மடல் கள் சென்று அடைந்தது அவன் தோழி இடமோ தோழனிடமோ
எவர் calendar இல் free time இருந்ததோ அவர் வளர்த்தது இவர்கள் காதல்

கம்ப்யூட்டர் காதல் open source ஆனதால் எளிதே re format செய்ய பட்டது
அவ்வப்போது facebook  'Friends of Friends' லிஸ்ட் இல் இவர்கள்
இணையும் போது மட்டும் ஒரு 'SMALL SOMETHING'

Software Kalyaana வைபோகமே!!!


 

Monday, November 3, 2014

Kanakku kanavu Computer

கணக்கின்றி  கணவுகள் கண்டோம் அன்று சுகமாஹ இருந்தது
தூக்கம் இன்றி கம்ப்யூட்டர் காண்கின்றோம்
கணவு காணும் சுகங்களுக்காக
கணவும் பிடி படவில்லை
சுகமும் தெரிவதில்லை
கம்ப்யூட்டர் உம் புரிவதில்லை
(அறிவுள்ள அதற்கு மனம் இல்லையே, பின்பு எப்படி புரிவது)

ஆஹ ! அன்று கண்ட கணவுகள் மறந்தோம் (அல்லது மறைத்தோம்)
இன்று கம்ப்யூட்டர் போல உழைத்தோம்
கணவுகளும் இன்றி தூக்கமும் இன்றி
சுகம் தேடி அலைகிறோம்

அட இஞ்சினீர் களே மறைத்தும் மறந்தும் போன கனவுகளில் அல்லவா
தேட வேண்டும்

மரத்தும் மனிதத்துவம் இல்லாத கணிபொறி இல் என்ன தேடுகிறீர்கள் ??