Sunday, October 18, 2015

pattadari

தோற்பவனுக்கு மட்டுமே கிடைக்கும்
பட்டம் - கவிஞன்

காதல் பட்டதாரி

Thursday, October 15, 2015

Possesiveness!

மலர் ஆனேன்
உன் வன தோட்டத்தில் ஒரு பூ என்றாய்

கிளி ஆனேன்
உன் வான பறவைகளில் ஒன்று என்றாய்

மனமுடைந்து ..
உன் ஒரே நிலவானேன் கரைவேன் என்று அறிந்தும்
நீ காணும் நட்சத்திர கூட்டத்தில் தொலைந்து போனேன்

இனி ஓர் ஒருவம் வேண்டாம் என்று மறைந்து விட்டேன் அம்மாவாசையாய்
என் ஒளி உன்னை ஈர்க்க வில்லை
நான் இல்லாத இருள்
உன் மனமெங்கும் பரவுகிரது என்கிறாய்

வலியில் சிரிக்கிறேன்!
அன்றும் இன்றும் !

Vizhikal ser!

மழலையில் உன்னை நான் அணைக்க
தாலாட் டியது உலகம்
சுஹித்தேன்

அரும்பாகி உன்னை நான் அணைக்க
திட்டியது உலகம்
சோம்பேறி ஆனேன்

இன்று தாலாட்டும் இல்லை திட்டும் இல்லை
அணைக்க ஆசை யோடு திரும்பினால்
நீ இல்லை ஓடி விட்டாய்

உறக்கமே விழிகள் சேர்!