Friday, November 11, 2011

முதல் முதல்

முதல் முத்தம்
ஈன்றெடுத்தஅம்மாவின் ஆசீர்வாதம்
முதல் வார்த்தை
அம்மா என்ற அற்புத கவிதை
முதல் நட்பு
மழலையில் பூத்த புரியா வரம்
முதல் காதல்
இதயம் தன்னை மறக்கும் முதல் கணம்
முதல் இரவு
பலமுறை மனப்பாடம் செய்தும் தவறும் தருணம்
முதலின் மதிப்பு மறுக்கப்பட முடியாது
முதல் நிகழ்வுகளை முதல் செய்வது அவரவர் விதியும் மதியும் பொருத்தது
விதித்ததை விட்டுவிட்டு மதி செலுத்த வேண்டிய முதல்களை சேமியுங்கள்
மதிமறந்து அல்ல மதி திறந்து செயல்படுங்கள்

3 comments: