Friday, February 10, 2012

Mangalyam Thanthuna Nena

கனவு உலகம் கனவுகள் ஆயிரம்
பெண்கள் எனும் பூக்கள்
மனதின் ஆழமோ ஆயிரம் ஆயிரம்
கனவுகள் காதல் தேடல்களுடன் பயணம் ஆரம்பம்

இனிதே முழங்கும் மந்திரம் மேளம்
பெற்றோர் ஏரோப்லேன் இல் ஏற்றி அனுப்புவது
பெண்ணை மற்றும் அல்ல அவள் கணவு மூட்டைகளும்

புதிய நாடு புதிய மக்கள் புதிய அனுபவம்
புதிய மனிதர் நாட்டில் மட்டும் அல்ல வீட்டிலும்
அந்த புதிய நாடு புர்தா இட்டு மறைத்தது முகத்தை மட்டும் அல்ல
மனதையும் கணவையும்

அந்த நாட்டில் வாழ்ந்த தாலோ ஏனோ
கணவனும் மறைத்தே பழகிவிட்டான்
அன்பையும் காதலையும் இன்னும் பல பெயர் தெரியா உணர்ச்சிகளையும்

கனவுகலளில் கணவு உலகில் வாழ்ந்த எமக்கு கனவுகளுடன்
வாழ்வது பெரிய விஷயம் இல்லை எனினும்
ஐயா ஒரு ஐயம்

நண்பர்கள் போலே வாழ்வதற்கு தாலியும் மேளமும் தேவை என்ன?
மனதை மறைத்து  வாழ்வதற்கு நாட்டியமும் சலங்கையும் தேவை என்ன?
காண கண்கள் இல்லா உலகில் அணிய தங்கமும் வெள்ளியும் தேவை என்ன?
கனவுகளில் வாழ்வதற்கு கணவனும் குடும்பமும் தேவை என்ன?

உங்கள் கண்களில் இன்பம் காண எங்கள் கனவுகள் வளர்த்து
காதலை மறைத்து பயணிக்கிறோம்
கனவுலகில் ...தடை இன்றி பயம் இன்றி
எங்களுக்குள் நாங்களே இயக்கி அழித்து அனுபவிக்கும் உலகம்
எங்களுக்கே எங்களுக்காக
அறிவோர் எவரும் இல்லை

கணவு களையும் பொழுது முழங்கும் மீண்டும்
மாங்கல்யம் தந்துனா நேனா ....
கனவும் நினைவும் கலந்த ஒரு பாதையில் பயணம் தொடரும்
.....







2 comments:

  1. My eyes rain as I read this, U touch me to the core! U are a great writer Viji! U said it all, what I cannot say.. in such beautiful words..((((hugs)))) to you! xx

    ReplyDelete
  2. this blog has a lot of typo's in the Na VS NNa..The problem of engligh to tamil conversion. I am trying to correct them yet...Thanks Chitti!

    ReplyDelete