Friday, April 5, 2013

Kaadal Kallavu Kalvar...

களவு போன பேனா
கிடைத்த போது
களவு போன ஜிமிக்கி
கிடைத்த போது
களவு போன புத்தகம்
கிடைத்த போது
களவு போன கொலுசு
கிடைத்த போது

தேடி தந்த கைகளுக்கு
நன்றி சொன்னேன்
கள்வனை கடிந்தேன்

ஒரு நாள் இதயம் களவு போனது
கள்வர் கலைஞன் ஆக
களவு இனித்தது
காண்பவை கவிதையானது !

களவு போன இதயம்
ஈட்டு தந்தீர்
இதயம் உருமாறி விட்டது
திருப்பி வைத்தும் பொருந்தவில்லை

களவாளி தேடுகிறேன்
களவு குடுக்கவும்  மறுத்து
மறைத்து வைக்கிறேன்

காவலும் வதைக்கிறது
களவும் வலிக்கின்றது

என்னை வதைக்கும் இதயம் தேவை இல்லை
என்று தூக்கி எரிந்து விட்டேன்
இதயம் அற்றவள் என்று கள்வரும் போய்விட்டனர்

கள்வரும் இல்லை
களவும் இல்லை

இதயம் எங்கோ துடிக்கிறது !!!






 

1 comment:

  1. inspired by a painting http://catscitylife.com/2013/02/10/trapped-in-a-heart/

    ReplyDelete